THE TEN COMMANDMENTS Deuteronomy_5

  பத்துகட்டளைகள் உபாகமம் 5ஆம்அதிகாரம்

One

7. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.

7 “You shall have no other gods before me.

Two

8. மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சுரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்.

8 “You shall not make for yourself an image in the form of anything in heaven above or on the earth beneath or in the waters below. 

9. நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக்குறித்து பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.

 9 You shall not bow down to them or worship them; for I, the Lord your God, am a jealous God, punishing the children for the sin of the parents to the third and fourth generation of those who hate me,

10. என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன்.

10 but showing love to a thousand generations of those who love me and keep my commandments.

Three

11. உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.

11 “You shall not misuse the name of the Lord your God, for the Lord will not hold anyone guiltless who misuses his name.

Four

12. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே, ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிப்பாயாக.

12 “Observe the Sabbath day by keeping it holy, as the Lord your God has commanded you.

13. ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக.

13 Six days you shall labor and do all your work, 

14. ஏழாம் நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் எருதானாலும், உன் கழுதையானாலும், உனக்கு இருக்கிற மற்றெந்த மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும் யாதொரு வேலையும் செய்யவேண்டாம்; நீ இளைப்பாறுவதுபோல உன் வேலைக்காரனும் உன் வேலைக்காரியும் இளைப்பாறவேண்டும்;

14 but the seventh day is a sabbath to the Lord your God. On it you shall not do any work, neither you, nor your son or daughter, nor your male or female servant, nor your ox, your donkey or any of your animals, nor any foreigner residing in your towns, so that your male and female servants may rest, as you do.

15. நீ எகிப்துதேசத்தில் அடிமையாயிருந்தாய் என்றும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை அவ்விடத்திலிருந்து வல்லமையுள்ள கரத்தினாலும் ஓங்கிய புயத்தினாலும் புறப்படப்பண்ணினார் என்றும் நினைப்பாயாக; ஆகையால் ஓய்வுநாளை ஆசரிக்க உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டார்.

15 Remember that you were slaves in Egypt and that the Lord your God brought you out of there with a mighty hand and an outstretched arm. Therefore the Lord your God has commanded you to observe the Sabbath day.

Five

16. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கும், நீ நன்றாயிருப்பதற்கும், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.

16 “Honour your father and your mother, as the Lord your God has commanded you, so that you may live long and that it may go well with you in the land the Lord your God is giving you.

Six

17. கொலை செய்யாதிருப்பாயாக.

17 “You shall not murder.

Seven

18. விபசாரம் செய்யாதிருப்பாயாக.

18 “You shall not commit adultery.

Eight

19. களவு செய்யாதிருப்பாயாக.

19 “You shall not steal.

Nine

20. பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.

20 “You shall not give false testimony against your neighbour.

Ten

21. பிறனுடைய மனைவியை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய வீட்டையும், அவனுடைய நிலத்தையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார்.

21 “You shall not covet your neighboru’s wife. You shall not set your desire on your neighbour’s house or land, his male or female servant, his ox or donkey, or anything that belongs to your neighbour.”

Things that came to my mind 

Farewell Ceremony of Nursing Superintendent Mrs Beaulah JabaMani – Saturday, 24 September 2022 ( 2012 – 2022)

  1. Very Sincere to her work – We worked with very little resource, manpower, worldly knowledge, without  political or community influence, protection, money, till today we never even had a security guard to our hospital only God protected us.
  2. Loyal , trust worthy, honest 
  3. Tolerant  
  4. Gracious 
  5. Innocent – I used to pull up madam for being very innocent 
  6. Responsible – she worked during Covid Crises, worked on Sundays, was available during critical times, can be relied upon.
  7. Teacher 
  8. Student – ready to learn new thing , very dynamic during NABH preparatory work.
  9. She was more of a Family to us- stood by Dr Keerthana during the delivery of Chris and Steve. 
  10. Came to work immediately after uncle’s death, bounced back from any situation to sustain her family and hospital 
  11. Prayer-full , God fearing 
  12. Very talented coordinator – used to coordinate between doctors, patients, students, staffs, pharmacy, medicine suppliers, bio medical, Dr M G R University.
  13. Had a cordial relation with every one.
  14. Did not find any negative aspect in her twelve years of service. Nothing negative came to my mind, may be I can only say she was too lenient or not strict with staff and students.
  15. Did not ask for salary increment till today. Never took leave unnecessarily.
  16. Moulded many girls life and character, discipleship. Imparted her skill, character and knowledge to many village girls. 
  17. Was able to handle difficult patient , difficult situations. Was ready to face challenging situations 
  18. Humble – will be in the injection room if staff not available, caries urine can, worked with leg and back pain – I know because she uses painkiller often but never tell it out.
  19. A Great Leader 
  20. She is Blessed, the hospital is blessed because of her.

 Dr Benedict Aruldas – Medical Director – Dr A C Aruldas Hospital.

Bible verse appropriate for  Mrs Beaulah JabaMani

  1. A Lady of Noble Character – குணசாலியான ஸ்திரீ 
  2. Matthew 25 : 4. புத்தியுள்ளவர்கள் தங்கள் தீவட்டிகளோடுங்கூடத் தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள்.
  3. மத்தேயு 25 : 23. அவனுடைய எஜமான் அவனை நோக்கி( Jesus): நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.
  4. சங்கீதம் 69 :35. தேவன் சீயோனை இரட்சித்து, யூதாவின் பட்டணங்களைக் கட்டுவார்; அப்பொழுது அங்கே குடியிருந்து அதைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.  36. அவருடைய ஊழியக்காரரின் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்; அவருடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் அதில் வாசமாயிருப்பார்கள்.
  5. சங்கீதம்  128 : 4. இதோ, கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவான்.5. கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்; நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய்.6. நீ உன் பிள்ளைகளின் பிள்ளைகளையும், இஸ்ரவேலுக்கு உண்டாகும் சமாதானத்தையும் காண்பாய்.

Written by Dr Benedict Aruldas – Medical Director – Dr A C Aruldas Hospital.

இளைஞர்களின் சீர்கேடு 

நம் சமூதாயத்தில் புதியவித கட்டுப்பாடற்ற ஒரு சமூக தீமையைக் காண்கிறோம் (social evil). இந்த புதுவித சமூக தீமையை கட்டுப்படுத்த மற்றும் அதை அகற்ற போதிய நடவடிக்கையும், விழிப்புணர்வும் நம்மில் காணப்படவில்லை.

இச்சமூக தீமை இளைஞர்கள் மத்தியில் சமூக நலன்போல் TV, CINEMA மூலம் போதிக்கப்படுகிறது. இச்சமூக தீமையினால் இளைஞர்கள் வாழ்வில் முன்னேற்ற மின்றி சோர்ந்து போகிறார்கள். இச்சமூக தீமை இன்று பொது  இடங்களில் அதிகமாகக் காணப்படுகிறது. 

பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் காணப்படும் காமவிகார எண்ணங்களின் செயல்பாடே இந்த புதியவித சமூக தீமை  – இதை குறித்து தான் நான் எழுதுகிறேன்.

இன்று பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் நட்பு என்ற பெயரில் தங்கள் இச்சையான எண்ணங்களையும், காமவிகார ஆசைகளையும் பரிமாறி கொண்டு வருகிறார்கள், வெட்கமின்றி அதை பொது இடங்களில் அவ்வகையான எண்ணங்களை வெளிப்படுத்துகிறார்கள். தாங்கள் என்ன செய்கிறர்கள் என்பதை மறந்து, நட்பு என்ற போர்வையில் விபச்சார செயலில் ஈடுபடுகிறார்கள்.

தொலைக்காட்சி, சினிமா, தரமற்ற நண்பர்கள்,முறைப்படுத்தப்படாத இணையதளம் கற்றுத் தரும் சித்தாந்தங்கள் ஆகியவை சிறுவர் இதயங்களில் விபச்சார எண்ணங்களின் விதையாக விழுந்து, வேகமாக வளர்ந்து, செயலாக மாறுகிறது. இச்செயல்களைத்தான் இன்று நம் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் பொது இடங்களில் வெளிப்படுத்துகிறார்கள், இச்செயல்கள் இளைஞர்களின் சீர்கேடுகளுக்கு அடையாளம்.

இச்செயல்கள் ஆவன 

  1. இணையதளம் மூலமாக மாறுபாடான காரியங்களைப் பார்ப்பது, நண்பர்களுடன் காமவிகார கோட்பாடுகளை விவாதிப்பது.
  2. ஓரினச்சேர்க்கை, விபரச்சாரம், வேசித்தனம் இவற்றை நன்மைகளைப்போல் பாவித்துப் பேசுவது.
  3. சினிமா, தொலைக்காட்சி, வலைஒளி நிகழ்ச்சிகளில் அதிக ஆர்வம் கொள்வது.
  4. சினிமா பாடல்களை கேட்பது, மற்றும் அப்பாடல் வார்த்தைகளை மீண்டும் மீண்டும் உச்சரிப்பது.
  5. நட்பு என்ற போர்வையில் காமவிகார எண்ணங்களுடன் எதிர் பாலினத்தை அணுகுவது.
  6. முக்கியமற்ற காரியங்களை எதிர் பாலினத்துடன் அதிகநேரம் பேசுவது, சமூகவலைதளம்மூலமாக விவாதிப்பது. 
  7. நீண்ட நேரம் எதிர் பாலினத்தோடு park, beach போன்ற பொது இடங்களில் செலவிடுவது.
  8. உறவுகள், நெருங்கிய நண்பர்கள் அல்லாதவர்களுடன் கொண்டாட்டங்களில் ஈடுபடுவது.
  9. பள்ளி, கல்லூரிகளுக்கு ஜோடியாக செல்வது.
  10. பள்ளி மற்றும் கல்லுரி மாணவ, மாணவியரின் காம உணர்வுகளை தூண்டும்வகையில் பேசுவது.

இறுதியாக இச்செயல்களில் ஈடுபடும் மாணவ மாணவியர் தங்களை காதல் ஜோடியாக பாவித்து பாலியல் செயல்பாடு, வேசித்தனம், விபச்சாரம், ஓரினச்சேர்க்கை, சட்டவிரோத உறவு ஆகிய சீர்கேடடைகிறார்கள். இந்த சமூக தீமை ( social evil ) புற்று நோய்போல் நம் இளைஞர்கள் மத்தியில் பரவி வருகிறது. 

இச்சமூக தீமையால் உருவாகும் சாபங்கள் 

  1. ஓரினச்சேர்க்கை
  2. பலருடன் பாலியல் உறவுகள்
  3. உறவுகளில் முறிவு.
  4. பாலியல் நோய்கள்.
  5. ஆண் மலட்டுத்தன்மை
  6. பெண் கருவுறாமை
  7. குடும்பங்களில் சண்டை, மன்னியாமை, சமாதான குறைவு, உடைக்கப்பட்ட குடும்பம்
  8. ஞானம் மற்றும் அறிவு இழப்பு
  9. திறன் இழப்பு
  10. நேர இழப்பு
  11. வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லாமை
  12. மோசமான சிந்தனைத்திறன் 
  13. விவாகரத்து
  14. கடன் மற்றும் நிதிச்சுமை
  15. மாறுபாடான காம எண்ணங்கள் 
  16. தொடர் கருக்கலைப்பு 
  17. கருப்பை பிரச்சனை

இச்சமூக தீமையை ( social evil ) ஓழிக்க நாம் செய்யவேண்டிய  செயல்கள்.

  1. இளைஞர்கள் முக்கியமாக பள்ளி மாணவ மாணவியர் பொது இடங்களில் தேவையின்றி நேரம் செலவிடுதலை எதிர்த்து குரல் கொடுக்கவேண்டும் 
  2. இவ்வாறான மாணர்களை பள்ளி, கல்லூரி நிர்வாகம் ஒழுங்கு நெறிப்படுத்த வேண்டும்.
  3. இளைஞர்களின் சீர்கேடானப்போக்குக்கு எதிரான சட்டங்கள் மற்றும் மசோதாக்களை அரசு இயற்றவேண்டும்.
  4. பொது இடங்களில் ஜோடி சேரும் இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
  5. குடும்பங்களில் சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பதை முழுவதுமாக தவிர்க்க வேண்டும்.
  6. பள்ளி மாணவர்களுக்கு செல்போன் தரக் கூடாது.
  7. இளைஞர் சீர்கேட்டை தடுக்கும் வகையில் பாடத்திட்டங்களை அரசு உருவாக்க வேண்டும். 
  8. மாறுபாடான காம எண்ணங்களிலிருந்து பாதிக்கப்பட்ட மாணவ, மணவியருக்கு உதவும் வகையில்  சீர்திருத்த மையங்கள் அமைக்கவேண்டும்.
  9. சினிமா தியேட்டர் ஹோட்டல், உணவகம் போன்ற இடங்களில் சட்டபூர்வமாக இணைக்கப்படாத ஜோடிகளுக்கு நுழைவு அனுமதி தரக்கூடாது. 
  10. இளைஞர்கள் மத்தியில் ஓரினச்சேர்க்கை கோட்பாடு மற்றும் காமவிகார கோட்பாடு உட்புகுத்தும் நிகழ்சிகள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளை தடை செய்ய வேண்டும்.

இன்று நாம் இந்த சமூகதீமையை எதிர்த்து செயல்படவில்லை என்றால் பாரதத்திற்கு நல்ல எதிர்காலமே இல்லாமல் போய்விடும். சிந்திப்போம் செயல்படுவோம்.

சமூக நலன் கருதி , Dr பெனிடிக்ட் அருள்தாஸ்